Map Graph

வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் ஓமியோபதி நிறுவனம்

வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் ஓமியோபதி நிறுவனம், என்பது இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் மேகாலயாவின் சில்லாங், மவ்டியாங்டியாங்கில் அமைந்துள்ளது. இதனை 22 திசம்பர் 2016 அன்று மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் யசோ நாயக் துவக்கிவைத்தார். இந்த நிறுவனம் 2016-17 கல்வியாண்டிலிருந்து தலா 50 மாணவர்களை பிஏஎம்எஸ் மற்றும் பிஎச்எம்எஸ் படிப்புகளில் சேர்க்கும் வகையில் ஆயுர்வேத மற்றும் ஓமியோபதி கல்லூரியைத் தொடங்கியுள்ளது

Read article